இளைஞர் காங். தலைவர் ராகுல்:ஆசாத்திடம் தமிழக பொறுப்பு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குலாம் நபி ஆசாத்துக்கு கட்சியின் பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து காங்கிரஸ் ஆட்சி அதற்கான வேலைகளில் ஜரூராக இறங்கியுள்ளது. கட்சி பொறுப்பில் அதிரடி மாற்றங்கள் சிலவற்றை கொண்டு வந்துள்ளது.
ஆசாத்திடம் தமிழக பொறுப்பு:
குலாம் நபி ஆசாத் மீண்டும் ஒரு முறை கட்சியின் பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் செயற் குழுவிலும் நீண்டகாலமாக இடம்பிடித்து வரும் இவரிடம் தமிழ்நாடு, கர்நாடகம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் இளைஞர் காங். தலைவர்:
ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திக் விஜய் சிங்கிடம் உத்தரப் பிரதேச மாநில தேர்தல், விளம்பர பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவர்களை தவிர்த்து மோஷினா கிட்வாயிக்கு பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசமும், முகுல் வாஸ்னிக்கிடம் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநில பொறுப்புகளும் தரப்பட்டுள்ளன.
பிரிதிவிராஜ் செளகான் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில பொறுப்புகளையும், ஜனார்த்தன் திரிவேதிக்கு தேர்தல் ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் திட்டமிடும் பதவியும், காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோராவுக்கு கூடுதலாக கட்சி நிர்வாக பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications