மேற்கு வங்கம்-கேரளா: இடதுசாரிகளுக்கு சரிவு-கருத்து கணிப்பு

தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து நேற்று இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடத்திய கருத்துக் கணிப்பை சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் வெளியிட்டன.
மேற்கு வங்கத்தில்...:
மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற இடதுசாரிகளுக்கு இம்முறை பின்னைடவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த தேர்தலை விட இம்முறை 5 சதவீத ஓட்டுக்கள் குறைவாக பெறும் என்றும், அவர்களுக்கு 46 சதவீத ஓட்டுக்கள் மட்டு்மே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் சிங்கூர் மற்றும் நந்திகிராம் விவகாரம் காரணமாக மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசின் ஓட்டுவங்கி வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்தமுறை 21 சதவீத வாக்குகளை கைப்பற்றிய மம்தா இம்முறை 27 சதவீதம் பெறுவார் எனத் தெரிகிறது.
இங்கு காங்கிரசுக்கு 15 சதவீதம் பேரும், பாஜகவுக்கு 7 சதவீதம் பேரும் ஓட்டளிக்க போவதாகத் தெரிவித்துள்ளனர்.
திரிணமுல் காங்கிரஸ் கடந்த தேர்தலில் இடதுசாரிகள் வாங்கிய 15 சதவீத ஓட்டுக்களையும், காங்கிரசின் 17 சதவீத ஓட்டுக்களையும், பாஜகவின் 6 சதவீத ஓட்டுக்களையும் இம்முறை தன் பக்ககம் இழுக்கும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.
2004 மக்களவைத் தேர்தலில் 1 தொகுதியில் மட்டுமே வென்ற மம்தா பானர்ஜிக்கு இம்முறை தேர்தலில் தனியாக நின்றாலே 12 அல்லது 13 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொண்டால் 21 முதல் 22 இடங்கள் வரை கைப்பற்றலாம் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கேரளாவிலும் ஏமாற்றம்...:
இடதுசாரிகளுக்கு கேரளாவும் கடும் ஏமாற்றத்தை தரவுள்ளது. கடந்த 2004ல் இங்கு 46 சதவீத வாக்குகளை பெற்றிருந்த இடதுசாரிகளுக்கு இம்முறை 38 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும்.
அதே நேரத்தில் இங்கு காங்கிரசின் ஓட்டுவஙகி 9 சதவீதம் உய்ர்ந்து 47 சதவீதத்தை எட்டி பிடித்துள்ளது. பாஜகவுக்கு 8 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 7 சதவீத வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இடதுசாரிகளின் பின்னைடவுக்கு முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பினரய் விஜயன் ஆகியோருக்கு இடையே நிலவும் பனி போர் தான் முக்கியக் காரணம் எனத் தெரிகிறது.
கடந்த முறை மொத்தமுள்ள 20 இடங்களில் 19 தொகுதிகளைக் கைப்பற்றிய இடதுசாரிகள் இம்முறை காங்கிரைவிட 5 முதல் 10 தொகுதி வரை குறைவாகவே பெறுவார்கள் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் கடந்த தேர்தலில் மேற்கு வங்கம், கேரளாவில் மொத்தம் 59 இடங்களில் வரலாறு காணாத வகையில் வென்று ஆட்சியமைப்பது யார் என்பதை தீர்மானித்த இடதுசாரிகள் இம்முறை 30 சீட் வெல்வதே பெரிய விஷயம் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications