போர் தீவிரத்தை குறைத்து விட்டதாம் இலங்கை
கொழும்பு: ஐ.நா. பிரதிநிதி அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள பின்னணியில் போர் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சிறப்புத் தூதராக ஜான் ஹோம்ஸ் நேற்று கொழும்பு வந்தார். அப்போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அவர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இரு தரப்பும் அப்பாவிகள் பலியாவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க போர்த் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கே கூறுகையில், முல்லைத்தீவு பகுதியில், போர்த் தீவிரத்தை வெகுவாகக் குறைத்துள்ளோம் என்றார்.
வன்னிப் பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசு இதை மறுத்துள்ளது.
ஏற்கெனவே அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்துவிட்டதாகவும் தற்போது ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே அங்கு இருக்கலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் முகாமில் தொற்று நோய்-7 சிறார்கள் பலி:
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து வெளியேறிய தமிழர்கள் கிளிநொச்சி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு சரியான சுகாதார வசதிகள் இல்லாததால் தொற்று நோய் பரவி வருகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் நிமோனியா நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களில் 7 சிறுவர்கள் உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி கிளிநொச்சி சுகாதார சேவை அதிகாரி டாக்டர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், வெப்ப நிலை அதிகரித்து வருவதால் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது என்றார்.
மாத்தனன், அம்பலன், பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய இடங்களில் மக்கள் கடற்கரை மணல் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். அங்கேயும் தொற்று நோய் பரவி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications