Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலில் சுவாமியை கைது செய்ய கோரிய வக்கீல்கள்!

Subscribe to Oneindia Tamil

Duraimurugan
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து சட்டசபையில் விதி 110-ன் கீழ் பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம்:

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழகத்தில் உள்ள பல தரப்பினரும், தங்கள் வசதி வாய்ப்புக்கேற்ப, பல்வேறு விதமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், பல கட்ட போராட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து ஒரு சில நாட்களாக நடத்தி வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தேசத்தின் சில முக்கிய தலைவர்களின் உருவப் படங்களை எரித்தும், உருவச் சிலைகளை அவமதித்தும் வந்தனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும், பூசல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசின் சார்பில் சட்டப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்துவதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச் சேர்க்கும்படி கோருவதற்காக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த 17ம் தேதி காலை 10 மணியளவில் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

காலை 11.50 மணியளவில் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் முழக்கங்களை எழுப்பியவாறு உள்ளே நுழைந்து அங்கே அமர்ந்திருந்த சுப்பிரமணியம் சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசித் தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்றவுடன் டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம்-ஒழுங்கு) ஆகியோரை முதல்வர் கருணாநிதி அழைத்து, உடனே தலைமை நீதிபதியை சந்தித்து நிலைமைகளை விளக்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கச் சொன்னார்.

மேலும் காவல்துறையின் உளவுப் பிரிவின் தலைவரை நேரடியாக மருத்துவமனைக்கே அழைத்து சுப்பிரமணியம் சுவாமியுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடைபெற்ற சம்பவங்களுக்காக வருந்துவதாகவும் முதலமைச்சர் தெரிவிக்கச் சொன்னார்.

சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மற்ற வழக்கறிஞர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கிலே தேடப்பட்டு வந்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம் சுவாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (ஜாதியைச் சொல்லி திட்டுதல்) கீழ் புகார் மனு ஒன்றைத் தருவதற்காக உயர்நீதிமன்றத்தின் வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

சுப்பிரமணியம் சுவாமி மீது தாங்கள் கொடுக்க வந்த புகாரினை பதிவு செய்துவிட்டு, அதன் பின்னர் தங்களைக் கைது செய்யுமாறு அவர்கள் கூறினார்கள்.

இதையேற்று அவர்கள் கொடுத்த புகார் மனுவினைப் பெற்று வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் சுப்பிரமணியம் சுவாமியை கைது செய்துவிட்டு பின்னர் தங்களை கைது செய்ய வேண்டுமென்றனர்.

இதன் தொடர்ச்சியாக இரு சாராருக்கும் இடையே தள்ளுமுள்ளுவில் ஆரம்பித்து, கல் எறிதலில் தொடர்ந்து நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் காயம்பட்டு, இறுதியாக காவல் நிலையம் கொளுத்தப்பட்டு, வன்முறை முற்றி இரு தரப்பினரும் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையிலே இருந்த முதலமைச்சர் இந்த தகவல் கிடைத்தவுடன் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, மாநகர காவல் துறை ஆணையர், கூடுதல் காவல் துறை இயக்குனர், சட்டம்-ஒழுங்கு ஆகியோரை நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி தலைமை நீதிபதியை சந்திக்க கூறினார்.

தலைமை நீதிபதியின் கருத்திற்கிணங்க, உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து காவல் துறையினர் வெளியேறினர். மேலும் மருத்துவமனையில் இருந்தவாறே முதலமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தை அனுப்பியதோடு, நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் குறித்து உண்மை நிலவரங்களை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் இந்த அரசின் சார்பில் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் இந்தச் சம்பவம் குறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படும் என்பதை இந்த அவைக்கும் நாட்டிற்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் துரைமுருகன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+