ஜெயலலிதாவின் ஏமாற்று அரசியல்-கருணாநிதி

இப்போது நானும் காங்கிரசும் கூட்டுச் சேரப் போகிறோம் என்று பேசியுள்ள ஜெயலலிதாவின் ஏமாற்றும் அரசியலை, தமிழக காங்கிரஸ் கட்சியினர் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று வரையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு இல்லை; உறவு இல்லை என்று கூறிக் கொண்டிருந்து விட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஏமாற்றி விட்டு, திருமண விழாவில், "நானும் காங்கிரசும் கூட்டுச் சேரப் போகிறோம்' என்று நாட்டை ஏமாற்றுகின்ற அரசியல் நாட்டியம் எனக்குத் தெரியாது.
சோனியா காந்தி என்ற அந்தச் சொக்கத் தங்கத்தை, பதி பக்தி இல்லாதவர்' என்று சொன்னவர் யார் என்று எனக்கும் தெரியும். நாட்டுக்கும் தெரியும்.
பதி பக்தியைப் பற்றி அவ்வாறு பேசியவர், எம்ஜிஆரைப் பற்றி ராஜீவ் காந்திக்கு கைப்பட என்ன கடிதம் எழுதினார் என்பதும் எனக்குத் தெரியும்.
இப்படிப்பட்டவரை காங்கிரஸ் கட்சி, கூட்டணி சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்! கடமை தவறாத நண்பர் வீரப்ப மொய்லி-இவருக்கு அளித்த மறுப்பு, தமிழ்நாட்டு காங்கிரஸ் நண்பர்களே, எண்ணிப் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையில், உண்மை எது? உண்மை அற்றது எது? திட்டமிட்டது எது? திட்டமிடாமல் நடந்தது எது? கலகத்துக்குக் காரணம் வழக்கறிஞர்களா? அல்லது காவல் துறையினரா?.
அல்லது இந்த விபரீத நிகழ்ச்சிக்குக் காரணமான வீசப்பட்ட முட்டைகள், அழுகிய முட்டைகளா? என்ற விவரங்கள் எல்லாம் சி.பி.ஐ. விசாரணை மூலம் விரைவாகத் தெரிந்து விடும்.
இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கும்போது, நானும், தமிழகத்தில் அமைதியோடு வாழ்கிற மக்களும் சி.பி.ஐ. விசாரணையின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதைத் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சியினரும், எல்லா கட்சித் தலைவர்களும், இதை தொடர்கதையாக ஆக்குவதற்கு இடம் தராமல் முடிந்து போன சோக நிகழ்ச்சி என்ற அளவில் இப்போதுநடந்து கொண்டிருக்கின்ற நல்லாட்சி தொடர உதவி வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications