நீதிபதிக்கு அடி-மாஜிஸ்திரேட் உண்ணாவிரதம்
வேலூர்: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தபோது நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் தாக்கப்பட்டதைக் கண்டித்து வேலூரில் மாஜிஸ்திரேட் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்,நீதிபதி மற்றும் வக்கீல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் எஸ்.குணசேகரன் நேற்று காலை 9.30 மணி அளவில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
கோர்ட் நுழைவுவாயிலின் முன்புற வராண்டாவில் பெட்ஷீட்டை விரித்து அதில் மாஜிஸ்திரேட்டு உட்கார்ந்தார். சிறிது நேரம் கழித்து, வராண்டாவில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்தார்.
அவருடன் ஆற்காடு வக்கீல்கள் சங்க தலைவர் பாபு தலைமையில் ஒரு பெண் உள்பட 15 வக்கீல்கள் சற்று தள்ளி, உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
மாலை 5.30 மணி வரை மாஜிஸ்திரேட் மெளனம் அனுஷ்டித்து உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் வழக்கறிஞர் அண்ணாமலை மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications