மார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு?
டெல்லி: மார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
லோக் சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகியுள்ளது.
இதுதொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் கடந்த மாதம் தொடங்கின. முதலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி மற்றும மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடனும், அதைத் தொடர்ந்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைவர்களுடனும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தாவுடன் தேர்தல் ஆணையர்கள் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதையடுத்து மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல கட்டமாக தேர்தல் நடத்துவதை விட ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதே நல்லது என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஒரே கட்ட வாக்குப் பதிவுக்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. எனவே இரு கட்ட வாக்குப்பதிவு அல்லது அதிகபட்சம் 3 கட்ட வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications