4 ஆண்டுகளில் 85 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் - ப.சிதம்பரம்
திருச்சி: காங்கிரஸ் கட்சியின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் 85 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலே முதன்முறையாக திருச்சியில் ரூ 75 கோடி செலவில் அதி நவீன முன்மாதிரி விமான நிலைய ஓடுதளம் கட்டப்பட்டுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா, எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது சிதம்பரம் பேசுகையில்,
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இப்போது அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரன்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளே பொருளாதாரமே சுனாமியால் திணறி வருகின்றன. இந்த நிலையிலும் நமது நாட்டின் வளர்ச்சி வகிதம் 7.1 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவில் 35.50 கோடி பேரிடம் செல்போன் உள்ளது. கிராமங்களில் இள நீர் விற்பனை செய்யும் பெண்களிடம் கூட செல்போன் உள்ளது. அதற்காக நாட்டில் வறுமை இல்லவே இல்லை என்று கூற மாட்டேன். 25 சதவீதத்தினர் வறுமையில் தான் உள்ளனர்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 85 கோடி மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் விரைவில் 9 சதவீதத்தை எட்டும் என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications