தடையை மீறி நாளை உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய வக்கீல்கள் முடிவு

சென்னை மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கத்தின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உயர்நீதிமன்றத்திற்குள் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி நாளை உள்ளே நுழைய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வக்கீல்கள் மீது தடியடி நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
உயர்நீதிமன்றம் தற்போது தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயா உத்தரவின் பேரில், போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன. கோர்ட் பணியாளர்களைத் தவிர மற்ற யாரும் உள்ளே நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நாளை தடையை மீறி உள்ளே நுழையப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications