போலீஸ் - வக்கீல் மோதல்: வெள்ளை அறிக்கை கோரும் வரதராஜன்
Subscribe to Oneindia Tamil
தேனி: சென்னை உயர்நீதி மன்றத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறை சம்பவம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நடந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்ட என்.வரதராஜன் பேசுகையில்,
தமிழகத்தில் காவல்துறையினர் அராஜகம் உயர் நீதி மன்றத்தையே சிதைத்துள்ளது. நீதிபதிகள் தாக்கப்பட்டு, மிரண்டு ஓடி ஒளிந்துள்ளனர். அந்த அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
உயர் நீதி மன்றத்திலே 65 வழக்கறிஞர்களின் மண்டை போலீசாரால் உடைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
சிபிஐ விசாரணையை துரிதப்படுத்துவதோடு தமிழக அரசு சட்டசபையில் இச்சம்பவம் தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications