அத்வானியை சந்தித்தார் அமெரிக்க தூதர் முல்போர்டு
டெல்லி: நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் அத்வானியை அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டு சந்தித்தார்.
அமெரிக்காவில் ஒபாமா அரசு பதவியேற்றதை அடுத்து நிர்வாக மாற்றங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டின் பதவி காலம் கடந்த மாதம் முடிந்த நிலையில் அவரது பதவி மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் அமெரிக்கா திரும்புகிறார். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நெருக்கமானவரான இவர் இந்திய- அமெரிக்க அணு சக்தி கூட்டு ஒப்பந்தம் ஏற்படுவதில் முக்கிய பங்காற்றினார்.
அவர் விடைபெறுவதற்கு முன் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். கடந்த வாரம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்தார்.
நேற்று முன்தினம் பாஜக பிரதம வேட்பாளரும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான அத்வானியை நேரில் சென்று சந்தித்தார்.
இது குறித்து பாஜக செய்திகுறிப்பு ஒன்று கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. சந்திப்பின் போது தெற்கு ஆசிய சூழ்நிலை, பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, அங்கு தாலிபான் தீவிரவாதிகளின் நடமாட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே












Click it and Unblock the Notifications