தொகுதி பங்கீடு-திமுகவுடன் பேச வரும் குலாம் நபி
சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வருகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், ஒரிஸ்ஸா மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக அக் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 26ம் தேதி வரை நடக்கும் நாடாளுமன்றக் கூட்டதையடுத்து எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். இந் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையும் துவக்கிவிட்டன. காங்கிரஸ் கட்சியும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.
இந் நிலையில் குலாம் நபி ஆசாத் மார்ச் முதல் வாரத்தில் சென்னை வருகிறார். அப்போது அவர் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஏற்கனவே கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகள் மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் கூட்டணியில் இடதுசாரிகள் இல்லாததால் காங்கிரஸ் கூடுதல் இடங்களைக் கேட்கும் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு குலாம் நபி நெருக்கமானவர், இதனால் அவர் அதிமுக கூட்டணிக்கு முயல்வார் என சில அதிமுக, பாஜக ஆதரவு பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
5 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியில் இருந்த பாஜகவின் தூண்டுதலின்பேரில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் ஆண்டோனயோ மொய்னோ என்று அழைத்து பதிபக்தி இல்லாதவர் என்று தாக்கினார் ஜெயலலிதா. அன்றிலிருந்தே ஜெயலலிதாவுடனான தனது நெருக்கத்தை குலாம் நபி உள்ளிட்ட பெரும்பாலான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வெட்டிக் கொண்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சோனியாவுக்கு நெருக்கமாக உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சோனியாவிடம் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஜெயலலிதாவுடன் கூட்டணி என்பதை சோனியா காந்தி விரும்பவில்லை. இந்தத் தகவலை தனது அரசியல் ஆலோசகர் அகமத் படேல் மூலம் திமுக தலைமையிடம் சோனியா தெளிவுபடுத்திவிட்டார்.
மேலும் இதுவரை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த திமுக எதிர்ப்பாளரான அருண்குமாரை தூக்கிவிட்டு அந்த இடத்தி்ல் குலாம் நபி நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications