கும்பாபிஷேகம்-உத்தபுரத்தில் கறுப்புக் கொடி
மதுரை: மதுரை அருகே உள்ள உத்தபுரத்தில் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வேண்டி வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி ஒரு தரப்பினர் நூதன போராட்டம் நடத்தினர்.
மதுரை அருகே உள்ளது உத்தபுரம். இங்கு பல வருடங்களாக சர்ச்சையை ஏற்படுத்திய தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட பின்பும் இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
இந் நிலையில் அந்த ஊரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடத்த ஊர் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் வெடித்து. இதில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இதனால் கும்பாபிஷேகப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந் நிலையில் கும்பாபிஷேக பணிகளுக்கு அனுமதி வழங்க கோரி ஒரு தரப்பினர் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மக்கள் தங்கள் வீடுகளில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளை அகற்றினர்.


Click it and Unblock the Notifications
