டிரக் விலையை குறைக்கும் டாடா-லேலண்ட்

குறிப்பாக கன ரக வணிக வாகனங்களுக்கு மத்திய அரசு 2 சதவீதம் வரை வரி குறைத்துள்ளது. உற்பத்தி வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், சேவை வரியை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் மத்திய அரசு குறைத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி டிரக் தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட், டிரக் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளன.
லாரி, டிரக் போன்ற வணிக வாகன உற்பத்திக்கு சேவை வரி மற்றும் உற்பத்தி வரியில் தலா 2 சதவீதம் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்து இந்த இரு முன்னணி டிரக் உற்பத்தி நிறுவனங்களும் டிரக் விலையை குறைக்கின்றன.
உற்பத்தி வரி குறைப்பால் நிறுவனத்துக்கு மிச்சமாகும் பணம் முழுவதையும் தங்களது வாடிக்கையாளர்களுக்கே கொடுத்து விட இவை முடிவு செய்துள்ளன. இத்தகவலை இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொர்ந்து இரு வாகன தயாரிப்பாளர்களும் ரூ.16,000 வரை விலையை குறைப்பார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications