மூக்கறுப்பு-அத்வானியை சந்திக்க மறுத்த தாக்கரே
மும்பை: தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த வந்த பாஜக மூத்த தலைவரும் அக் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான அத்வானியை சிவசேனா தலைவர் பால் தாக்கரே சந்திக்க மறுத்துவிட்டார்.
இரு கட்சிகளுக்கும் இடையே நெடுங்காலமாகவே பிரச்சனை இருந்து வருகிறது. இந் நிலையில் நேற்று மும்பை வந்த அத்வானி, கூட்டணி குறித்துப் பேச பால் தாக்கரேவை சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பினார்.
ஆனால், அவரை சந்திக்க விரும்பவில்லை என்று பால் தாக்கரே தரப்பிலிருந்து மூக்கறுப்பு பதில் வந்தது. இதை எதிர்பாராத பாஜக தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந் நிலையில் தாக்கரேவை சந்திக்க அத்வானி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என பாஜக மறுத்தது.
ஆனால், அதற்கு பதிலடி தரும் வகையில், நிருபர்களிடம் பேசிய சிவசேனை செய்தித் தொடர்பாளர் நீலம் கோரிஹே, தாக்கரேவை சந்திக்க அத்வானி முயன்றது உண்மை தான். ஆனால், முதலிலேயே இதற்கான அப்பாயின்மெண்ட்டை கேட்டிருக்க வேண்டும். அதை அத்வானி செய்யவில்லை என்றார்.
பாஜக கூட்டணியை விட சரத்பவாருடன் கூட்டணி அமைக்கவே தாக்கரே ஆர்வமாக உள்ளார். ஆனால், பவாரோ காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் முடிவில் உள்ளார்.
மோடியை நீக்கக் கூடாது என்று சொன்னேன்-தாக்கரே:
இந் நிலையில் இன்று தனது கட்சியின் நாளிதழான சாம்னாவில் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,
குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்குப் பின் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க பலர் முயற்சித்தனர். ஆனால், அவரை நீக்கக் கூடாது என்று அத்வானியிடம் நான் சொன்னேன்.
மோடி போனால் பாஜகவை விட்டு குஜராத் போய்விடும் என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications