திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக மனு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உயர்நீதிமன்றத்தில் வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்துள்ளது. எனவே திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.2.2009 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மூலம் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்து விட்டது.
போலீஸாரின் கொடூரமான தாக்குதலில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அப்பாவி பொதுமக்கள் எனப் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையின் காரணமாக தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு, போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால் மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதற்கான பதற்றமான சூழல் நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவும் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து பணியிலுள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ள தமிழகத்தில் அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க வேண்டும்.
அதற்கான அறிக்கைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, ஆட்சியைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications