மதுவுக்கு மல்லுக்கட்டு-பெண் வியாபாரி கைது
கோவை: வீட்டில் சட்டவிரோதமாக மது விற்ற பெண்ணிடம் கடனுக்கு மது கேட்ட வாலிபர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இதையடுத்து பெண் மது வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உளள கண்ணார்புதூரை சேர்ந்தவர் சகாயமேரி (வயது 47). இவர் அரசு மதுக்கடைகளில் இருந்து மதுபான பாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செயது வந்துள்ளார்.
சகாயமேரி வீட்டில் 'சரக்கு' கிடைக்கும் விவரத்தை அறிந்து கொண்ட செல்வன் (27) என்ற குடிமகன் நேற்று அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சகாயமேரியிடம் கடனுக்கு மதுபானம் தருமாறு செல்வன் கேட்டுள்ளார். ஆனால் சகாயமேரி கடனுக்கு தரமறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
மது கிடைக்காத ஆத்திரத்தில் செல்வன், கடனுக்கு மது தராவிட்டால் திருட்டுத்தனமாக மது விற்பதை போலீசாரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சகாயமேரி, மகேஷ் குமார் (27) என்பவருடன் சேர்ந்து செல்வனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் செல்வனின் மனைவி புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி, ஏட்டு பார்த்திபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செல்வனை தாக்கிய சகாயமேரி, மகேஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications