பாஜக முன்னிலை-முக்கிய மாநிலம் தமிழகம்: கருத்துக் கணிப்பு
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கைப்பற்றும். இருந்தாலும் தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கிடைக்கும் தேர்தல் முடிவுகளை வைத்து தான் இறுத் முடிவுக்கு வர முடியும் என எகானாமிக் அன்ட் போலிட்டிக்கல் என்ற வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்காது. சிறு சிறு மாற்றங்களால் கிடைக்கும் ஓட்டுக்களின் மூலம் இக்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் கைப்பற்றும் ஒன்று, இரண்டு கூடுதல் தொகுதிகள் மாற்றத்தை சிறிய மாற்றதையே கொண்டு வரும்.
சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்த இடங்களை வைத்து பார்த்தால் பாஜக கூட்டணி, காங்கிரசை விட அதிக செல்வாக்குடன் இருக்கிறது.
கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி, மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்களில் மொத்தம் 116 தொகுதிகள் உள்ளன.
இதில் 72க்கும் அதிகமாக தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் பாஜக வலுவான நிலையில் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளும் ஆந்திரா, ஹரியானா, சிக்கிம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அனைத்தும் எப்போதும் ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டளிக்கும் மாநிலங்கள் என சொல்ல முடியாது.
இங்கு பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.
இந்த மாநிலங்களில் ஆந்திராவில் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம், ஹரியானாவில் பஜன் லாலின் ஜன்கித் காங்கிரஸ் ஆகியவற்றின் தாக்கத்தை வைத்து தான் காங்கிரசின் நிலைமையை முடிவு செய்ய முடியும்.
ஜார்க்கண்ட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும், ஓரிஸ்ஸாவிலும் ஆளுங்கட்சிகள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.
உத்தரகண்ட், குஜராத், பஞ்சாப் மற்றும் பிகார் என பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் 84 தொகுதிகள் உள்ளன. இதை பாஜக எளிதாக தக்கவைத்துக் கொள்ளும்.
மொத்தத்தில் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கிடைக்கும் முடிவை வைத்தே யார் வெல்வது என்பது இறுதியாகும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications