பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு ஜாதிச் சான்று!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் ஜாதி சான்றுகள் உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியிலே வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக ஜாதிச்சான்று, வருவாய்சான்று, இருப்பிடச்சான்று போன்றவைகள் தேவைப்படுகின்றன.
அவைகளைப் பெற தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தால் கிடைப்பதற்கு பல நாட்களுக்கு மேலாகிவிடுகிறது. இதனால் மாணவர்களுக்கு கால விரையம் மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுகின்றன.
இவைகளை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே ஜாதிச்சான்று, வருவாய்சான்று, இருப்பிடச்சான்று வழங்குமாறு மாவட்ட கலெக்டர் சவுண்டையா அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சான்றிதழ்களை பெற மாணவர்கள் தலைமை ஆரிசியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை நல்ல முன்னுதராணமாக கொண்டு மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறுவார்கள். கவனிக்கமா தமிழக அரசு...
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications