டீசல் விலை குறைக்கப்படாது: மத்திய அரசு
டெல்லி: டீசல் விலையைக் குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் பாண்டே தெரிவித்துள்ளார்.
டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை பெட்ரோலியத்துறை வட்டாரமும் உறுதிப்படுத்தியது. நேற்று விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று எதிர்பார்க்கப்பட்டது போல விலைக்குறைப்பு அறிவிக்கப்படவில்லை. மேலும் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்படவே இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை செயலாளர் பாண்டே கூறுகையில், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் திட்டமும், யோசனையும் தற்போது துறையிடம் இல்லை என்றார்.
எனவே இப்போதைக்கு டீசல் விலைக் குறைப்புக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்டது.
டீசல் விலைக் குறைப்பு குறித்து விவாதிக்கப்படாதது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக இதுகுறித்து அமைச்சரவைக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
பெட்ரோல் 1 லிட்டர் வெறும் 82 ரூபா.. மத்திய அரசு அறிமுகம் செய்த E85 வகை.. உங்கள் வண்டியில் ஊற்றலாமா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications