இலங்கை-வேலூர் தேமுதிக தொண்டர் தீக்குளிப்பு!
வேலூர்: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் மாவட்டம் வானியம்பாடியில், தேமுதிக செயலாளர் தீக்குளித்தார். படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாணிம்பாடி அருகே உள்ளது வள்ளிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளாராக இருப்பவர் சீனிவாசன் (22). இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போன சீனிவாசன் இது குறித்து அடிக்கடி தனது நண்பர்களுடன் உணர்ச்சி பிளம்பாக பேசுவாராம்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் உடல் பாதி எறிந்தது. இருப்பினும் அவரை காப்பாற்றி வாணிம்பாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சீனிவாசன் மாற்றப்பட்டார்.
தகவல் அறிந்த போலீசார் வாணிம்பாடி சீனிவாசனிடம் தீக்குளிப்புக்கான காரணத்தை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications