சென்னை-மதுரை இடையே வாரம் 2 சிறப்பு ரயில்
சென்னை: கோடைகாலத்தையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை- மதுரை இடையே வாரம் இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை வாரம் வாரத்தில் இரு முறை (வியாழன், சனிக்கிழமைகளில்) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (எண்-0634) மதுரையிலிருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து மார்ச் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை வாரம் இருமுறை (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்) மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில் (எண்-0633) சென்ட்ரலில் இருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மதுரை சென்றடையும்.
முன்பதிவு ஆரம்பம்...:
இந்த ரயில்கள் கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மதுரையில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் கூடுதலாக பெரம்பூரில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications