மலேசியாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணி
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 1 மணி தொடங்கி 3 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை கண்டித்து கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மக்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையே! சிறிலங்கா இராணுவத்தின் தமிழினப் படுகொலையை உடனே நிறுத்து!
ஐக்கிய நாட்டு சபையே! தமிழினப் படுகொலையை உடனே நிறுத்த சிறிலங்கா இராணுவத்தை ஆணையிடு!
ஐக்கிய நாடுகள் சபையே! உமது அறிக்கைகள் தேவையில்லை! சிறிலங்கா அரசிடம் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கைகள்தான் தேவை!
ஐக்கிய நாடுகள் சபையே! "கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்"
தமிழீழத்தை அங்கீகரி போன்ற முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பியவாறு மக்கள் திரண்டிருந்தனர்.
தமிழர் இனப் பிரச்சினையை அரசியலாக்கும் தலைவர்களின் உருவப்படங்களை செருப்பால் அடித்தும் தமது கால்களால் மிதித்தும் மக்கள் தமது எதிர்ப்பை, வெறுப்பை வெளிக்காட்டினர்.
இரத்தம் தோய்ந்த குழந்தைகளின் உருவப்பொம்மைகளை தாங்கி "அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும்" என கூடியிருந்தவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
பின்னர் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த உலக அமைதி முனைவகத்தின் பிரதிநிதிகள், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவை அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உரிய பதில் அளிப்பதாகத் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications