மருத்துவமனையிலிருந்து இன்று வாஜ்பாய் டிஸ்சார்ஜ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து 26 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பவிருக்கிறார்.

வாஜ்பாய் மார்பு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல்நிலை கொஞ்ச கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டது.

84 வயதான அவர் மருத்துவமனையில் இருந்தபடியை உலக நிகழ்கவுகளை டிவியில் கண்டு வருகிறார். அங்கிருந்த டிவியில் ஹிந்தி பாடல்களைக் கேட்டார். ரஹ்மானுக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டதின் மறு ஒளிப்பரப்பினை கண்டு மகிழ்ந்தார்.

இந்நிலையில் நேற்று எய்ம்ஸ் டாக்டர் சம்பத்குமார் கூறுகையில், வாஜ்பாய் தற்போது நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலை வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்கும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+