மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் - வீடு திரும்பினார் கருணாநிதி

கடுமையான முதுகுவலி காரணமாக கருணாநிதி ஜனவரி 26-ம்ந் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பிப்ரவரி 11-ம் தேதி முதுகு தண்டு வடத்தில் அறுவைச் சிகிச்சை நடந்தது. மொத்தம் 34 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார் முதல்வர்.
இந்த நிலையில் அவரது உடல் நலம் தேறியது. இதைத் தொடர்ந்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்படி இன்று காலை 9 மணிக்கு முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆம்புலன்ஸ் வேனில் புறப்பட்டு வீடு திரும்பினார். முதல்வருடன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகன் மு.க.அழகிரி, அமிர்தம், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், மத்திய அமைச்சர் ராசா மற்றும் டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டாக்டர்களும் உடன் வந்தனர்.
கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவதைத் தொடர்ந்து மருத்துவமனை முன்பு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு இருந்தனர். வழியெங்கும் ஆங்காங்கே தி.மு.க.வினர் கருணாநிதிக்கு வரவேற்பு கொடுத்தனர்.
வரும் வழியில், புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள அன்பகத்தை வேனில் இருந்தபடியே முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்











Click it and Unblock the Notifications