பிளஸ்டூ தேர்வு நாளை தொடங்குகிறது - பலத்த பாதுகாப்பு
சென்னை: பிளஸ்டூ எனப்படும் மேல்நிலைப் பள்ளிப் பொதுத் தேர்வுகள் நாளை முதல் தொடங்குகின்றன. தேர்வுகளை முறையாக நடத்த பறக்கும் படைகளுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6.80 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25-ந் தேதியும், மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 18-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் 1,738 மையங்களில் தேர்வு நடக்கிறது.
3000 பறக்கும் படைகள்
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி' அடிப்பதை தடுக்கும் வகையில் 3 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் தலைமையில் இயங்கும் பறக்கும் படையினர் தினசரி ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
பறக்கும் படையினர் தவிர மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு பறக்கும் படை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படையினர் தொழிற்கல்வி சேர்க்கைக்கு முக்கிய பாடங்களாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட தேர்வு நாட்களில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் விரிவாக செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 47,857 மாணவ-மாணவிகள் 135 மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். 20 மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு பணியில் 3,160 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 150 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி தெரிவித்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications