சென்செக்ஸை ஆட்டம் காண வைத்த ரிலையன்ஸ்!
மும்பை: வாரத்தின் முதல்மநாலான இன்று சென்செக்ஸின் துவக்கமே பெரும் சோதனையாக அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவுக்குள்ளாகியுள்ளது சென்செக்ஸ் குறியீட்டெண். முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் தலைமையிலான ரிலையன்ஸ் குழும பங்குகள் அனைத்துமே பெரும் சரிவுக்குள்ளாகியுள்ளன.
திங்களன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்தே பெரும் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 284 புள்ளிகள் சரிந்து 8,607.08 புள்ளிகளில் முடிவடைந்தது. கடந்த 3 மாதங்களில் சென்செக்ஸ் இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதல்முறை.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் பெரும் சரிவுதான் இன்றைக்கு. இன்று 89 புள்ளிகள் சரிந்து 2674 புள்ளிகளில் நிலைபெற்றது.
அமெரிக்கப் பொருளாதாரம், முன்னெப்போதையும் விட மோசமான சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதன் காரணமாகவே சர்வதேச சந்தைகளில் இந்த சரிவுப் போக்கு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தின் பெரும் சாரிவுக்கு இன்னொரு முக்கியமாகத் திகழ்ந்தது ரிலையன் நிறுவனம், அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியத்தை இணைத்துக் கொள்ள மேற்கொண்டுள்ள முயற்சி. இதனால் அனில் அம்பானி தலைமையில் இயங்கும் பல நிறுவனங்களின் பங்குகளும்கூட இன்று சரிவைச் சந்தித்தன.
இரு குழுமங்களும் ஒன்றிணையப் போவதாக எழுந்துள்ள செய்திகளும்கூட, அதை அம்பானி சகோதரர்கள் அமைதியாக அனுமதித்துள்ளதும் கூட இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் என அனைத்து நிறுவனப் பங்குகளும் இன்று பெரும் சரிவுக்குள்ளாகின.
இன்னொரு பக்கம் டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸின் தள்ளாட்டம் ஐடி பங்குகளின் வர்த்தகத்தை பெருமளவு பாதித்துள்ளது.
துவக்க நாளே இப்படியாகிவிட்டதே, இந்த வாரத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ என்ற முணுமுணுப்பு பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று பலமாகவே எழுந்துள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications