மீண்டும் 3வது அணி-அதிமுகவும் இணைந்தது

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணிகளை முடிவு செய்வதில் மும்முரமாக உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடா இன்று பெங்களூரில் வெளியிட்டார்.
இந்த மூன்றாவது அணியில் அதிமுக, தெலுங்குதேசம், மதசார்பற்ற ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆர்எஸ்பி, பார்வர்ட் பிளாக் ஆகிய 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மூன்றாவது அணியின் முதல் பேரணி வரும் 12ம் தேதி பெங்களூரில் நடக்கவிருக்கிறது.
அதிமுக அடங்கிய மூன்றாவது அணி அமைவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலின் போது அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணி அமைத்து. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுக, பாஜக பக்கம் போய் பைரான் சிங் ஷெகாவத்தை ஆதரிக்க மூன்றாவது அணி கலகலத்து போனது.
இதையடுத்து அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்தன. அதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இது எத்தனை நாளைக்கோ...
காங்கிரஸ், சமாஜ்வாடி பேச்சு...
மற்றொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும் மேற்கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாக தெரிகிறது.
காங்கிரஸ் உ.பியில் குறைந்தது 25 தொகுதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால், 12 இடங்கள் தருவதாக ஆரம்பித்த சமாஜ்வாடி தற்போது 17 தொகுதிகள் வரை வந்துள்ளது.
இந் நிலையில் இன்று சோனியாவை சந்திக்கிறார் சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங். அதில் இடப் பிகிர்வு இறுதியாகும் என்று தெரிகிறது.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications