கார்த்திக் கட்சி பிரமுகர் மீது மோசடி வழக்கு
நெல்லை: ஆந்திர தொழிலதிபருக்கு கடன் வாங்கி தருவதாகக் கூறி கமிஷன் பெற்று அதை திருப்பி கொடுக்க மறுத்த வழக்கில் நடிகர் கார்த்திக் கட்சியின் பொது செயலாளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ்வர ரெட்டி என்பவர் நெல்லை சிஎன் கிராமத்தை சேர்ந்த நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் பொது செயலாளர் சேதுராமபாண்டியன் மற்றும் எஸ்ஆர் தேவர் ஆகியோரிடம் தொழில் அபிவிருத்திக்காக ரூ.100 கோடி கடன் கேட்டு கமிஷன் தொகையாக ரூ.2 கோடி கொடுத்தார்.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட சேதுராம பாண்டியன் உள்ளிட்டோர் கடன் வாங்கி கொடுக்காததை அடுத்து தான் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பி கேட்டார். அவர்கள் கொடுக்காமல் ஏமாற்றினர்.
இதையடுத்து ஆந்திர தொழிலதிபர் நெல்லை மாநகர குற்றபிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தி சேதுராம பாண்டியன், அவரது உதவியாளர் ராஜேஷ், பேரன் மூர்த்தி, எஸ்ஆர் தேவர் மற்றும் சேலத்தை சேர்ந்த புரோக்கர் கோவிந்தசாமி ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ரூ. 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சேதுராமபாண்டியன் தவிர மற்றவர்கள் ஜாமினில் வெளி வந்துள்ளனர். சேதுராமபாண்டியன் மீது குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சில வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுசூதனன் பாளையங்கோட்டை சிறை சென்று சேதுராமபாண்டியனிடம் விசாரணை நடத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications