பொய் வழக்கு போடும் திமுக-சரத்குமார் கடிதம்!
கோவை: சமத்துவ மக்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு போட திமுகவினர் தூண்டி வருவதாக தமிழக போலீஸ் டிஜிபிக்கு அக்கட்சி தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கோவை மாவட்டம் வால்பாறையில் 16-வது வார்டுக்கு உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சற்குணம், திமுக சார்பில் சின்னச்சாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 26ம் தேதி நள்ளிரவில் குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எங்களது கட்சினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்த கட்சியினர், வேட்பாளர் சற்குணம், நகர நிர்வாகிகள் மதி, செபஸ்டியன் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பணம் கொடுப்பவர்களை தடுக்க சென்றுள்ளனர். அதற்குள் பணம் கொடுத்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
உண்மை இப்படி இருக்க அதிகாலை 1.30 மணியளவில் திமுகவினரை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் தாக்கியதாக கூறி அவர்களே சட்டையை கிழித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார்கள்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளை வற்புறுத்தி சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய கோரி வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் காவல் நிலையத்தில் முடக்கி வைத்து உள்ளனர்.
எனவே, உடனடியாக தாங்கள் தலையிட்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். வாக்காளருக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்மாறு காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும் என கடிதத்தில் சரத் கூறியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications