வைகோவுக்கு ஜாமீன்-இன்று விடுதலை
திருநெல்வேலி: தூத்துக்குடியில், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிக் கைதான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெல்லை கோர்ட் இன்று ஜாமீன் அளித்தது.
தூத்துக்குடிக்கு வந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு வைகோ தலைமையில் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்பினர் சேர்ந்து கருப்புக் கொடியையும், துடைப்பங்களையும் காட்டி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 195 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். வைகோ உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இன்று நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் மாஜிஸ்திரேட் ஹேமந்த் குமார் முன்பு வைகோவுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் கோரிக்கைக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து நீதிபதி ஹேமந்த் குமார் வைகோவை சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டார்.
இதேபோல மதிமுக எம்.எல்.ஏக்களான விருதுநகர் வரதராஜன், சிவகாசி ஞானதாஸ் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் நீதிபதி ஹேமந்த் குமார் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications