தமிழகத்தில் 13 மக்களவைத் தொகுதிகள் மாற்றம்

தமிழகத்தில் நாடாளூமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த 13 தொகுதிகளின் பெயர்கள் நீக்கிவிட்டு தொகுதிகளை மறுசீரமைப்பு செய்துள்ள தேர்தல் ஆணையம் அவற்றுக்கு பதிலாக 13 புதிய தொகுதிகளை உருவாக்கியுள்ளது.
நீக்கப்பட்ட தொகுதிகள்:
இதன்படி கடந்த தேர்தலில் இடம்பெற்ற செங்கல்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, திண்டிவனம், ராசிபுரம், திருச்செங்கோடு, கோபிசெட்டிபாளையம், பழனி, பெரியகுளம், புதுக்கோட்டை, சிவகாசி, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் இனி இருக்காது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள்:
திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகவே இருக்கும்.
கடந்த தேர்தலில் தனி தொகுதிகளாக இருந்த சில தொகுதிகள் தற்போது பொது தொகுதியாகவும், பொது தொகுதியாக இருந்த சில தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களால் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட பல தொகுதிகள் காணாமல் போய்விட்டன. இதனால் இவர்கள் தொகுதி மாற வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர் இளங்கோவன் (கோபிசெட்டிபாளையம்), திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வி (திருச்செந்தூர்), சுப்புலட்சும் ஜெகதீசன் (திருச்செங்கோடு), மதிமுக செஞ்சி ராமச்சந்திரன் (வந்தவாசி) ஆகியோரின் தொகுதிகள் இப்போது இல்லை.
இதற்கிடையே சில மத்திய அமைச்சர்கள் தொகுதி மாற திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
தொடர்ந்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்த மத்திய அமைச்சர் டிஆர் பாலு, இம்முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications