For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதம்-பீதியால் பாதிக்கப்பட்ட தொடர்கள்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: உலக அளவில் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் பீதியால் பாதிக்கப்பட்டுள்ளன, பல ரத்தாகியுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை...

1996 - இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. இந்த நிலையில் கொழும்பில் உள்ள சென்டிரல் வங்கியை விடுதலைப் புலிகள் தாக்கியதைத் தொடர்ந்து, இலங்கையில் விளையாட ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மறுத்து விட்டன.

2002 - நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கராச்சியில் டெஸ்ட் போட்டி நடக்கவிருந்த நிலையில் அங்கு குண்டு வெடித்தது. இதையடுத்து டெஸ்ட் தொடரை நியூசிலாந்து ரத்து செய்தது.

2003 - கென்யாவில் உலக கோப்பைப் போட்டிகள் நடந்தபோது அங்கு வந்து விளையாட இங்கிலாந்து அணி மறுத்து விட்டது.

2006 - இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டது.

2008 - மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. பின்னர் மீண்டும் வந்து விளையாடியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X