மும்பை பாணியில் சரமாரியாக தாக்கிய தீவிரவாதிகள்!
லாகூர்: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று நடத்திய கொலை வெறித் தாக்குதல் கிட்டத்தட்ட மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே இருந்தது.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் போலவே லாகூர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் டிரஸ் அணிந்திருந்தனர். முதுகில் பைகளைத் தொங்க விட்டபடி கையில் துப்பாக்கிகளுடன் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
மேலும், வேறு பகுதியிலிருந்து வந்து உடனடியாக தாக்குதலில் இறங்கியது போலவும் தோன்றுகிறது. மேலும் மும்பையில் தாக்குதல் நடத்திய அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
தீவிரவாதிகள் வந்த விதமும், அவர்கள் தாக்குதல் நடத்திய விதமும், போலீஸாரை செயலிழக்க வைத்த விதமும் இதை நிரூபிப்பதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிக்ஷாவில் வந்த தீவிரவாதிகள்..
தீவிரவாதிகளில் மூன்று பேர் ரிக்ஷாவில் வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காயமடைந்த வீரர்கள் குறித்து இலங்கை அணியின் மேலாளர் பிரன்டன் குருப்பு கூறுகையில், குமார சங்கக்காரா, அஜந்தா மென்டிஸ் காயமடைந்துள்ளனர் என்றார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொகுகே கூறுகையில், சங்கக்காரா, மெண்டிஸ் தவிர தரங்கா பிரனவிதனா, திலன் சமரவீரா ஆகியோரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சமரவீரா நெஞ்சில் குண்டு பாய்ந்தது:
சமரவீராவின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications