பிரமோஸ் ஏவுகணை-வெற்றிகரமாக சோதனை
டெல்லி: கடந்த சோதனையில் தோல்வியை தழுவிய பிரமோஸ் ஏவுகணை இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி கண்டது.
இந்திய, ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணை பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி 20ம் தேதி நடந்த சோதனையில் இந்த ஏவுகணை இலக்கைத் தவறவிட்டது.
ஆனால், அதை மூடி மறைத்து சோதனை வெற்றி அடைந்ததாக அறிவித்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவு (டிஆர்டிஓ). பின்னர் இந்த ஏவுகணை சோதனை தோல்வியைத் தழுவிய உண்மை வெளியில் வந்தவுடன் அதை வேறு வழியின்றி ஒப்புக் கொண்டது டிஆர்டிஓ.
இந் நிலையில் 290 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் இந்த ஏவுகணை இன்று காலை 10.30 மணிக்கு ராஜஸ்தான் மாநில பொக்ரானில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.
இது குறித்து டிஆர்டிஓ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று காலை பொக்ரானில் நடந்த சோதனையில் பிரமோஸ் இரண்டரை நிமிடத்தில் இலக்கை துல்லியமாக தாக்கியது. சோதனையை இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம் எஸ் தத்வால் பார்வையிட்டார் என்றார்.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications