கிரீன்வேஸ் சாலைக்கு தினகரன் பெயர்-இந்து முன்னணி போராட்டம்
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலைக்கு, மறைந்த கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை இந்து முன்னணி போராட்டம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழமையான கிரீன்வேஸ் ரோடு என்பதை மாற்றி, இந்துக்களை மத மாற்றம் செய்த டி.ஜி.எஸ்.தினகரன் பெயர் வைத்திருப்பது தமிழ் பண்பாட்டிற்கும், பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கும் இழைக்கப்படுகிற மிகப் பெரிய அநீதி. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலைக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி சாலை (டி.டி.கே. ரோடு) என்று பெயர் சூட்டியபோது, கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்த காரணத்திற்காக எம்.ஜி.ஆர். அம்முயற்சியை கைவிட்டார்.
அதேபோல, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை என்ற பெயரை மாற்ற முயற்சித்தபோது முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெயர் மாற்றமும் கைவிடப்பட்டது.
ஆகவே, தமிழக அரசு இந்த பெயர் மாற்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இந்து முன்னணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
சென்னையில் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார்' மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications