மின் தடைக்கு எதிராக மனித சங்கிலி-கிருஷ்ணசாமி
கடையநல்லூர்: மின் தடையை கண்டித்து வரும் 15ம் தேதி புதிய தமிழகம் சார்பில மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கடையநல்லூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தென் தமிழகத்தில் தொழில் வளம் பெருக வலியுறுத்தி மாவட்ட மாநாடு நடந்தது. கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசுகையில்,
தொழில் வளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடந்த ஜனவரி 30ம் தேதி திருச்சியில் புதிய தமிழகம் சார்பில் முதல் மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து விருதுநகர், மதுரை, கடையநல்லூரில் நடத்தப்படுகிறது.
இது தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தக்கூடிய மாநாடு அல்ல. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த மற்றும் ஆளும் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தென் தமிழக வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை.
மின்தடை நீக்கிட வரும் 15ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்காக மனித சங்கிலி போராட்டம் புதிய தமிழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 6 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது. தமிழகத்தில் அரசியல் நோக்கம் கொண்ட குரல்தான் இலங்கை தமிழர் பிரச்சனையில் காணப்படுகிறது.
அதனால்தான் உலக நாடுகள் ஆதரவு குரல் கொடுக்க முன்வரவில்லை. இப்படி இருந்தால் தமிழர்களை உலக நாடுகள் எப்படி ஆதரிக்கும். எங்கு மனித உரி்மை மீறல் நடந்தாலும் புதிய தமிழகம் தனித்து குரல் கொடுக்கும். தென் தமிழகத்தில் தொழி்ல் வளர்ச்சியை பெருக்கிட வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications