'ஆஹா...!:' நாங்களும் போட்டியிடுவோம்..கார்த்திக்
கோவில்பட்டி: பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக், இன்னும் ஓரிரு வாரங்களில் கூட்டணி குறித்து முடிவெடுக்கவுள்ளாராம்.
தேர்தல் வந்துவிட்டால் கார்த்திக்கின் தொல்லை தாங்க முடியாது. கூட்டணி என்பார், போட்டி என்பார், மாநாடு என்பார்.. ஆனால் ஒன்றையும் முழுதாக செய்ய மாட்டார்.
இந் நிலையில் அவர் தொடங்கியுள்ள அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பொதுகூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது.
நாங்களும் போட்டியிடுவோம்..
கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பது பற்றி விரைவில் முடிவு செய்து ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும்.
பொருளாதார வீழ்ச்சியால் விலைவாசி உயர்ந்துள்ளது. தேவைக்கேற்ப உற்பத்தியை பெருக்க வேண்டும். தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
அணுசக்தி ஓப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை அணுசக்தி மூலம் 2 ஆண்டுகளில் பூர்த்தி செய்து கொள்ளலாம். இட ஓதுக்கீடு மிக முக்கியமானது. ஆனால் அதனுடைய பலன் ஏழைகளை சென்றடைய வேண்டும் என்றார் கார்த்திக்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications