இலவசப் பொருட்கள் வழங்க தடை: நரேஷ் குப்தா
திருச்சி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இலவசப் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
திருச்சி வந்த குப்தா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்து விட்டதால் புதிய திட்டங்கள் பற்றி அறிவிப்புகள் வெளியிட முடியாது. புதிய திட்டங்களை தொடங்கவும் கூடாது. இலவச பொருட்களையும் அரசு வினியோகம் செய்யக்கூடாது.
அமைச்சர்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளக்கூடாது. அவர்களது தனிப்பட்ட சுற்றுப்பயணத்திற்கு அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. இதை எல்லாம் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் தகவல் தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலின்போது வேட்பாளர்கள் பொது இடங்களில் அரசு சுவர்களிலோ தனியார் சுவர்களிலோ விளம்பரங்கள் செய்யக் கூடாது என்ற சட்டம் ஏற்கனவே எல்லா மாநில அரசுகளிலும் உள்ளது. இந்த சட்டத்தை இந்த தேர்தலின்போது கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது. எனவே வேட்பாளர்கள் சுவர் விளம்பரங்கள் செய்வதை அனுமதிக்க முடியாது.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 99.45 சதவீத அளவிற்கு நிறைவு பெற்று விட்டது. சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தான் சிறிய அளவில் நிலுவை உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி துரித அளவில் நடந்து வருகிறது.
கடந்த பொது தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 15 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வந்து ஓட்டு போடலாம் என்ற முறை அமலில் இருந்தது. ஆனால் நடைபெற இருக்கும் தேர்தலில் புகைப்பட வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஓட்டுபோடுவதற்கு குறைந்த அளவிலான ஆவணங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். அவை என்னென்ன ஆவணங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார் குப்தா.
அதிமுக புகார்:
பின்னர் மதுரை வந்த குப்தா 9 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பின்னரும் மதுரையில் ஆங்காங்கே திமுகவினர் இலவச டிவி, இலவச வீட்டு மனைப் பட்டா, இலவச கேஸ் அடுப்புகள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications