"நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது-எம்பி''

இவர் வழக்கமாகவே தொகுதியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். மக்களோடு மிக நெருக்கமாக உள்ள ஒரிரு எம்பிக்களில் இவரும் ஒருவர்.
இவர் தனது பணிகள் குறித்து தொகுதி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் பயணித்தார்.
இந்த வேடத்திலேயே விழுப்புரம் மாவட்ட பாமக அலுவலகத்துக்கும் வந்தார். அங்கிருந்தவர்களுக்கே இவரை அடையாளம் தெரியவில்லை.
"நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது உங்க கட்சிக்கு நல்ல காலம் பொறக்குது'' என்றவர் அங்கிருந்த கட்சியினரின் பெயர்களைச் சொல்லி விசாரிக்க ஆரம்பிக்கவே, முதலில் மிரண்டு போனவர்கள், பின்னர் இவரை அவர்கள் அடையாளம் தெரிந்து கொண்டனர்.
இதே வேடத்தில் திண்டிவனத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து "நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது'' என்று ஆரம்பித்து மக்களை மகிழச் செய்துவிட்டு பின்னர் அப் பகுதிகளில் தான் செய்த பணிகள் குறித்து விளக்கிவிட்டு குறைகளையும கேட்டார் தன்ராஜ்.












Click it and Unblock the Notifications