கூகுள்: 4 நிர்வாகிகளுக்கு தலா 1.2 மில்லியன் டாலர் போனஸ்!

கூகுள் நிறுவனத்தின் 4 உயர் நிர்வாகிகளுக்கு 2008ம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள போனஸ் எவ்வளவு தெரியுமா? தலைக்கு 1.2 மில்லியன் டாலர்கள் மற்றும் அதற்கும் மேல். இந்த மோசமான கால கட்டத்திலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியமைக்காக இவ்வளவு பெரிய தொகையை கூகுள் அள்ளி வழங்கியுள்ளது.
இத்தனைக்கும் இது கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் குறைவே.
2007ம் ஆண்டு கூகுளின் லாபம் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகமாக இருந்தது. 2008ல் லாபம் குறைந்த போதிலும் நஷ்டம் ஏற்படாதவாறு காத்துக் கொள்ள இந்த நிர்வாகிகள் உதவி மிகப் பெரிய அளவில் இருந்ததாம்.
இந்த நால்வரில் ஜோனதன் ரோஸன்பெர்க்குக்கு (கூகுள் தயாரிப்புகளை வெளிநாடுகளில் மார்க்கெட்டிங் செய்பவர்) 1.64 மில்லியன் டாலரும், விற்பனை அதிகாரி ஓமிட் கோர்டஸ்டணி மற்றும் பொறியாளர் ஆலன் யூஸ்டாஸுக்கு தலா 1.38 மில்லியன் டாலர்களும் போனஸாகக் கிடைத்துள்ளது.
கூகுள் சிஎப்ஓ ஜார்ஜ் ரெயெஸ் 6,75,000 டாலர்கள் போனஸாகப் பெறுகிறார். கூகுளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு 6 மில்லியன் டாலர் போனஸ் தர நிர்வாக விதிகள் இடமளிக்கின்றன.
மேலும் 2010 வரை பொருளாதார சரிவு நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்காது என்றும் அதுவரை தாக்குப் பிடிக்க செலவுக் குறைப்புகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் கூகுள் தலைமை நிர்வாகி எரிக் ஷ்சும்மிட் தெரிவித்துள்ளார்.
கூகுள் ஆன்லைன் விளம்பர வருமானம் குறைந்தாலும், இப்போதைக்கு சமாளிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனப் பங்குகள் மதிப்பு 3.3 சதவிகிதம் குறைந்து 10 டாலர்கள் என்ற விலையில் செவ்வாய்க்கிழமை கைமாறின.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications