ஆற்றில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி - 40 பேர் படு காயம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 60 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 40 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரத்திலிருந்து அவியனூர் வழியாக பண்ருட்டிக்கு தனியார் பஸ் ஒன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ரெட்டிக் குப்பத்தை சேர்ந்த பரசுராமன் என்பவர் ஓட்டியுள்ளார்.
சேமங்கலம் மலட்டாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பஸ் திடீரென்று நிலைத் தடுமாறி அங்கிருந்த பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகளின் பீதியில் கூக்குரலிட்டுள்ளனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றினர்.
புதுப்பேட்டையை சேர்ந்த லட்சுமி (38), தமிழ் (40), பண்டரக்கோட்டையை சேர்ந்த வள்ளி (40), மீனாட்சி (55), தமிழரசி(35), செல்வி (45), திருவாமூரை சேர்ந்த பஸ் டிக்கெட் பரிசோதகர் தேவநாதன் ஆகியோர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் படுகாயமடைந்த ராஜ்மோகன் (45), கனி, துரைக்கண்ணு, அஞ்சலை உள்ளிட்ட 10 பேர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும வழியில் ரெட்டி குப்பத்தை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications