தலிபான்களால் கொல்லப்பட்ட சைமனின் உடல் கண்டுபிடிப்பு - கை துண்டிப்பு
கள்ளக்குறிச்சி: ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சைமனின் உடலை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். சைமனின் உடலில் ஒரு கை இல்லை.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைமன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள, இத்தாலி நாட்டு பேக்கரி கடையில் வேலை பார்க்கச் சென்றார்.
இந்த நிலையில் ஆப்கனில் உள்ள இத்தாலி ராணுவ வீரர்களுக்கு பேக்கரி நிறுவனத்திலிருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது. அந்தக் குழுவில் சைமனும் இடம் பெற்றிருந்தார்.
அப்போது சைமனை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி்ச் சென்றனர். அவரை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். மீட்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 8ம் தேதி சைமனை சுட்டுக் கொன்று விட்டதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
இதனால் சைமனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். இதை விட துயரமாக, கொல்லப்பட்ட சைமனின் உடலை ஒப்படைக்கவும் தலிபான் தீவிரவாதிகள் பணம் கேட்டதுதான்.
இந்த நிலையில் சைமனின் உடல் 23 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலில் ஒரு கை இல்லை. மேலும் உடலில் 5 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன.
சைமன் உடல் மீட்கப்பட்டிருப்பது குறித்து காபூலில் தங்கியுள்ள அவரது சகோதரர் சுப்ரமணியம் தொலைபேசி மூலம் சொந்த ஊருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சைமனின் உடல் இன்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications