கொழும்பில் ஆனந்த விகடன் விற்பனையாளர் திடீர் கைது
விடுகலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் தலைமையில் இயங்கும் புலிகளின் விமானப் படை, அது சமீபத்தில் கொழும்பில் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த செய்திகள் ஆனந்த விகடனில் விரிவாக வெளியாகியுள்ளது.
இந்த இதழ்களை அவர் விற்பனை செய்ததால் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கிசை காவல் நிலையத்தில் அவரை அடைத்துவைத்துள்ளனர்.
கொழும்பில் பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது. பல பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் பந்தாடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பத்திரிக்கை விற்பனையாளர்களையும் இலங்கை போலீஸார் குறி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஆனந்த விகடன்' வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள 'பூபாலசிங்கம்' புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான கட்டுக்களை இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பியபோது, அதனை சோதனையிட்ட காவல்துறையினர், அதில் பிரசுரமாகியிருந்த வான் தாக்குதல் குறித்த கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதைக் கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், வியாழக்கிழமை மாலை விகடன் கொழும்பு விற்பனைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் கல்கிசை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக ஸ்ரீதர்சிங்கின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் 'ஆனந்த விகடன்' வார இதழை 'பூபாலசிங்கம்' புத்தகசாலை தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
1981 ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், யாழ். பொது நூல் நிலையம் ஆகியவை சிங்கள காடையர்களாலும் படையினராலும் திட்டமிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டபோது யாழ். நகரின் மத்தியில் இருந்த 'பூபாலசிங்கம்' புத்தகசாலையும் பெருந்தொகையான நூல்களுடன் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது













Click it and Unblock the Notifications