ஜெ. உண்ணாவிரதம் ஒரு திருப்புமுனை: சிவாஜிலிங்கம் எம்.பி.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் திருப்புமுனையாக அமையும் என இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்க ராஜா பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த போராட்டம் இலங்கைதமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications