மயிலாடுதுறையில் மீண்டும் மணிசங்கர் அய்யர்!

மயிலாடுதுறை தொகுதியில் கடந்த 1991ம் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதன்முதலில் போட்டியிட்டு வென்ற மணிசங்கர் அய்யர் பின்னர் 1999ம் ஆண்டும், இதையடுத்து 2004ம் ஆண்டு தேர்தல்களிலும் வென்றார்.
இம்முறை தேர்தல் வெற்றியோடு மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதிகாரப் பரவலாக்கல், பஞ்சாயத்து ராஜ் ஆகியவை தான் அய்யரின் 'பெட் சப்ஜெக்ட்'.
கட்சியி்ன் 'திங்க் டாங்குகளில்' ஒருவரான அய்யர் காங்கிரசின் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருபவர். இவருக்கு ராஜிவ் குடும்பத்தினரிடம் நெருக்கம் அதிகம்.
அகில இந்திய காங்கிரஸ் இளைஞர் பயிற்சித் தலைவராக இருந்து வரும் அய்யர் ராகுல் காந்தியை அரசியலுக்கு தயார் செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளார் அய்யர்.
மேலும் மயிலாடுதுறை தொகுதியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மிகச் சிற்பபாக அமல்படுத்தியுள்ளார் மணிசங்கர். இதனால் தொகுதியின் கிராம மக்களிடையே மணிசங்கருக்கு நல்ல மரியாதை உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பல கோஷ்டிகள் இருந்தாலும் ராஜிவ் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால் எல்லா கோஷ்டிகளாலும் மரியாதையாக பார்க்கப்படுபவர்.
இவர் மீண்டும் மயிலாடுதுறையிலேயே போட்டியிட திட்டமிட்டு்ள்ளார். இவருக்காக மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் நிச்சயம் மீண்டும் திமுகவிடம் கேட்டுப் பெறுவது உறுதி என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவனில்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications