மக்களவை தொகுதி அறிமுகம்-6:காஞ்சிபுரம்

இதுவரை இருந்து வந்த செங்கல்பட்டு என்ற பெயரை மாற்றி காஞ்சிபுரம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
தற்போதைய புதிய காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள தொகுதிகள் - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வென்ற தொகுதி செங்கல்பட்டு. இடையில் காங்கிரஸும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. 1999 முதல் இந்தத் தொகுதி பாமக வசம் மாறியது.
இதுவரை அதிமுக 5 முறை செங்கல்பட்டு தொகுதியில் வென்றுள்ளது. திமுக, காங்கிரஸ் தலா 3 முறையும், பாமக இரு முறையும் இங்கு வென்றுள்ளன. இரு முறை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஓ.வி.அழகேசன், சிட்டிபாபு, அன்பரசு, ஜெகத்ரட்சகன், ஏ.கே.மூர்த்தி ஆகிய பிரபலங்கள் வென்ற தொகுதி. தற்போதைய செங்கல்பட்டு எம்.பி. ஏ.கே.மூர்த்தி ஆவார்.
கடந்த தேர்தல் நிலவரம் (செங்கல்பட்டு)
ஏ.கே.மூர்த்தி (பாமக) - 4,31,643.
கே.என்.ராமச்சந்திரன் (அதிமுக) - 2,82,919.
வெற்றி வித்தியாசம் - 1,48,724 வாக்குகள்.
இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்
1951 - ஓ.வி.அழகேசன் - காங்கிரஸ்.
1957 - என்.சிவராஜ் - சுயேச்சை.
1957 - ஏ.கிருஷ்ணசாமி - சுயேச்சை.
1962 - ஓ.வி.அழகேசன் - காங்கிரஸ்.
1967 - சி.சிட்டிபாபு - திமுக.
1971 - சி.சிட்டிபாபு - திமுக.
1977 - ஆர்.மோகன ரங்கம் (அதிமுக)
1980 - அன்பரசு - காங்கிரஸ்.
1984 - ஜெகத்ரட்சகன் - அதிமுக.
1989 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
1991 - எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் - அதிமுக.
1996 - கே.பரசுராமன் - திமுக.
1998 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
1999 - ஏ.கே.மூர்த்தி - பாமக.
2004 - ஏ.கே.மூர்த்தி - பாமக.
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ஓ.வி.அழகேசன் (காங்கிரஸ்).












Click it and Unblock the Notifications