ஆப்கனில் கொல்லப்பட்ட சைமனின் உடல் சொந்த ஊர் வந்தது
விழுப்புரம்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சைமனின் உடல் இன்று சொந்த ஊரான பிரம்மகுண்டத்திற்கு வந்து சேர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் இத்தாலி நாட்டு பேக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சைமன் அங்கு தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடலை 23 நாட்களுக்குப் பின்னர் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சைமனின் உடலை விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து அங்கிருந்து சொந்த ஊருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சங்கராபுரம் ஒன்றிய குழு தலைவர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் தசரதன், கவுன்சிலர் துரைவேலவன், ஆகியோர் சைமனின் உடலை காரில் பிரம்மகுண்டம் கிராமத்திற்குக் கொண்டு வந்தனர்.
சைமனின் உடலைப் பார்த்து அவரது மனைவி வசந்தி மற்றும் குழந்தைகள், உறவினர்கள், குடும்பத்தினர் கதறி அழுதனர். கிராமமே சோகமயமாக காணப்பட்டது.
இன்று மாலை சைமனின் உடல் அடக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications