சிவகாசி-சூடு பிடிக்கும் கொடி, போஸ்டர் தயாரிப்பு
சிவகாசி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகள், சின்னங்கள், தலைவர் படங்கள் தயாரிக்கும் பணிகள் சிவகாசியில் ஜோராக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல வெளி மாநிலங்களிலும் இருந்து ஆர்டர் குவிவதால் இங்குள்ள அச்சங்கள் இரவு பகலாக முழுவீச்சில் இயங்கி வருகின்றன.
துணிக் கொடிகள், பிளாஸ்டிக் கொடிகள், கட்சி சின்னங்கள், தலைவர்களின் படங்கள், தொப்பிகள் ஆகியவை தயாரிக்க சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு ஆர்டர்களை அரசியல் கட்சிகள் அள்ளிக் கொடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து சிவகாசியில் வேலைகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. சிவகாசி உள்ள அச்சகங்கள் அனைத்திலும் திமுக, அதிமுக என அனைத்து கட்சி கொடிகளும் வேறுபாடின்றி ஒற்றுமையுடன் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications