கூட்டணி: 2 நாட்களில் முடிவு-ராமதாஸ் அறிவிப்பு

லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாமகவுக்கு அதிமுக 6 லோக்சபா சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பாமக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சென்னை சூளையைச் சேர்ந்த ஸ்ரீதரின் உடலுக்கு இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திருமாவளவனும் வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிரை மாய்த்து கொள்ளக் கூடாது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக் கத்தை சேர்ந்த திருமாவளவன், வைகோ, நெடுமாறன், தா. பாண்டியன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் உணர்ச்சி மிகுதியால் இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.
மதிப்பிட முடியாத இந்த தியாகத்தை யாரும் தொடர வேண்டாம் என்றார்.
அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 2 நாளில் பா.ம.க. பொதுக்குழு கூடுகிறது. அதில் முடிவு செய்வோம் என்றார் ராமதாஸ்.
ஜெ. உண்ணாவிரதத்திற்கு வரவேற்பு:
முன்னதாக டாக்டர் ராமதாஸை, திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியில் வந்த ராமதாஸிடம், ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இலங்கைத் தமிழர்களுக்காக நடத்தப்படும் உண்ணாவிரதம் இது. எனவே இதை வரவேற்கிறோம் என்றார்.
அதேபோல திருமாவளவன் கூறுகையில், காலம் கடந்த முடிவு என்றாலும் கூட இலங்கைத் தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தை இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வரவேற்கிறேன் என்றார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications